பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வகுப்புகள் துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அசோக் வரவேற்புரையாற்றினார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் இணைச் செயலர் கோவிந்தசாமி தலைமையுரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மனித வள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் கலந்து கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான திருஞானசம்பந்தம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
