கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (23.06.2026) காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு. இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து தீரவு காணலாம்.
மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

