இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளை முன்னிட்டு, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில், பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு காகித விளக்கக்காட்சி, லோகோ வடிவமைப்பு போட்டிகள் நடைபெற்றன.
சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, தாளாளர் சுகுணா, இயக்குநர் சாந்தினி அனீஸ் குமார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜாலு, டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியாளர்களின் முக்கியப் பங்கு மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கல்வியுடன் இணைந்து நடைமுறை அறிவு, தொழில்நுட்பத் திறன், புதுமையான சிந்தனை மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
