கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துணைவேந்தர் ரவி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பவன் குமார் ரெட்டி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கினார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பதிவாளர் பிரதீப், மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் கலந்துகொண்டனர்.
