நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழக காவல்துறையுடன் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு பேசுகையில்: இளைஞர்களிடம் போதை கலாச்சாரம் உள்ளதால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் விடுதியிலோ அல்லது குழுவாக தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தாலும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

cover 8 scaled

அருகாமையில் இருப்பவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதையோ அல்லது போதை பொருட்களை சப்ளை செய்வதையோ தெரிந்து கொண்டீர்கள் என்றால், உடனடியாக காவல்துறையினரிடமோ அல்லது காவல்துறை செயலி மூலமாகவோ தகவல் அளித்தால் அது வருங்கால சந்ததிகளை காப்பாற்ற உதவிகரமாக இருக்கும்.

தகவல் தரும் பட்சத்தில் உங்கள் பெயரும், விலாசமும் மற்றவரக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே தைரியமாக தகவல் அளிக்கலாம். கல்லூரியில் பயிலும் நான்கு வருடமும் சுய ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் ஒரு கல்வி பயில வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்வில் காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ், நேரு கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் நாகராஜா, கல்லூரியின் முதல்வர் மணியரசன், மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.