கோவை நீதிமன்றம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்ததால், தண்ணீர் தொடர்ந்து வெளியேறி சாலை முழுவதும் வீணாக ஓடுகிறது.
குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், உடைந்த குழாயை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous
