ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில், லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில், முதல் முறையாக புத்தகம் வெளியிடும் 28 எழுத்தாளர்கள் ஒரே மேடையில், ஒரே நாளில் தங்களது முதல் நூலை வெளியிட்ட உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

நிகழ்வை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் முன்னெடுத்தார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வழிகாட்டுதலில் நடைபெற்ற இம்முயற்சியில், டிஎன்ஏ பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டு ஒத்துழைப்புடன் அனைத்து நூல்களும் வெளியிடப்பட்டன.

உலக சாதனை முயற்சியை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, பங்கேற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.