கோவை மாவட்டத்தில் அரசு தரப்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று வரும் சனிக்கிழமை ரத்தினம் பல்கலையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது :-
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். 22.08.2026 அன்று காலை 8 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம்.
வேலைநாடும் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் candidate login எனும் பிரிவில் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 0422-2642388, 9499055937 என்ற எண்ணில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

