தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் கொடிசியாவில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கொடிசியாவில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அவிநாசி சாலை வழியாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சின்னியம்பாளையம், நீலம்பூர், எல் & டி புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி சாலையை சென்றடைந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடிசியா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக உணவுகள் கிடைக்கும் விதமாக கட்டணம் செலுத்தி பெறக்கூடிய தற்காலிக உணவகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்குவதில் உள்ள குறைபாடுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலரை 9384808302 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.