கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் போத்தனூர் சாலை பாத்திமா கனி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பொது சுகாதாரப் பிரிவு, பொறியியல் பிரிவு, நகர அமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, வருவாய் துறை பட்டா மாறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மக்களின் மனுக்கள் பெறப்படுகின்றன. முகாமில், மேயர் ரங்கநாயகி, ஆணையர் சிவ குரு பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் மற்றும் தெற்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.