கோவை மாநகரத்தின் அவிநாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள ஜிடி நாயுடு உயர்மட்ட மேம்பாலம் வரும் மே 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் மூடப்படும் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பைபர் ஆப்டிகல் கேபிள்களை இணைக்க வேண்டிய பணிகள் இருப்பதால் அடுத்த ஐந்து இரவுகளுக்கு மேம்பாலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous

