டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் மேலாண்மையியல் துறை சார்பாக மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மதுரா வி. பழனிசாமி முன்னிலை வகித்தார். அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், இயக்குநர் முத்துசாமி, கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



ஹரிபவனம் ஹோட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
