தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ‘அம்மா’ உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்து சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் தமிழக முதலமைச்சரின் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து இன்று மேட்டுப்பாளையம் பிரதான சாலை. புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அவர், அம்மா உணவகத்திற்கான உணவு பொருட்களின் இருப்புகள் மற்றும் தேவைப்படும் சமையல் உபகரணங்கள் தொடர்பாகவும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார், மேலும் உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளை உட்கொண்டார்.

