கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் இயங்கும் பிரபல நிர்மலா மகளிர் கல்லூரியில் 2-நாள் புத்தக கண்காட்சி ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

கல்லூரியின் நூலகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேலைவாய்ப்பிற்கான நூல்கள், கவிதைத்தொகுப்புகள், வணிகவியல், அறிவியல், கணிதவியல், கணினி அறிவியல், திறன்மேம்பாட்டு என பல்வேறு துறை சார் நூல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியை கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ் மற்றும் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர்   தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்று வித விதமான நூல்களை பற்றி அறிந்து கொண்டதோடு தங்களுக்கு பிடித்தமான நூல்களை வாங்கி பயன்பெற்றனர்.

புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நூலகத்துறையினர் செய்திருந்தனர். முதுநிலை நூலக தகவல் அறிவியல் ஆய்வுத்துறை மற்றும் நூலகத் துறைத் தலைவர்,   துணைமுதல்வர் ஜாக்குலின் மேரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் மல்லிகா, மகேஸ்வரி, ரோஸ்லின் மேரி போன்றோர் பங்கேற்று சிறப்பித்தனர்.