கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இளநிலை, முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு இரண்டு நாள்கள் நடைபெற்றது.
கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கி பேசுகையில்: மாணவர்கள் வள்ளுவத்தை வாழ்க்கைக்கு வழித்துணையாகக் கொண்டால், வளமான எதிர்காலம் அமையும்; பண்பில் மேம்பட்டு மனிதநேயம் சிறந்து வாழலாம் என்று அறிவுறுத்தினார்.
முதல் நாள் விழாவில் எல்.டி.எம்., பிசினஸ் சொல்யூஷன் லீட், நிறுவனத் தரவு மற்றும் பகுப்பாய்வு அதிகாரி, ஐஸ்வர்யா நந்தகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: மாணவர்கள், தங்களின் இலக்குகளை நோக்கித் துணிச்சலுடன் பயணிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு, ஆளுமையில் சிறக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இரண்டாம் நாள் விழாவில் காக்னிசென்ட் நிறுவனத்தின் எஸ்.பி.யு., தலைவர் ஜெயகிருஷ்ணன் அப்புசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: மாணவர்கள் இன்றளவில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பயன்கொள்ள வேண்டும். இலக்கைத் தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு, குறையாத ஆர்வத்துடன் தொடர்ந்து உழைத்தால், எதையும் சாதிக்கலாம் என்றார்.
நிகழ்வில் துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், தேர்வாணையர் பழனிவேலு, மாணவர்கள் கலந்துகொண்டனர்.
