கோவை – போத்தனூர் இடையேயான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (எண்: 66615) செப்டம்பா் 18 முதல் 20 வரை, மேட்டுப்பாளையம் – வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். வடகோவை – போத்தனூர் இடையேயான சேவை இந்த நாடகளில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், செப்டம்பா் 18 முதல் 20 வரை போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மெமு ரயில் (எண்: 66616) போத்தனூர் – வடகோவை இடையே ரத்து செய்யப்படும். இந்த ரயில் வடகோவையில் இருந்து பிற்பகல் 3.52 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
