கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் புதுநிறுவன நிறுவனர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை வல்லுநர்கள், ஊடகத்துறையினர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

கே.பி.ஆர். குழுமத் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஐபிராண்டிங்ஹப் நிறுவனர் கவுதமன், தொழில் – குளோபல் இன்டர்ன்ஷிப் பிளாட்ஃபார்ம் இயக்குனர் யோகேஷ் குமார், ஸ்டார்ட்அப் டிஎன் திட்டத் தலைவர் காயத்ரி ஆகியோர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

குழு கலந்துரையாடலில், தொழில்முனைவு வாய்ப்புகள், புதுநிறுவன வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டன. மேலும், ‘யானை முகத்தழகா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பும் நடைபெற்றது.