கோவை சாய்பாபா காலனி வழியே சாலைகளில் நிறுவப்பட்டுள்ள ‘சென்டர் மீடியன்’ மேல் பிளெக்ஸ் விளம்பரத்தை இருபுறம் தொங்கவிடப்பட்டுள்ளது, வாகனஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும்படி அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் பிளெக்ஸ் விளம்பரகள், குறைந்த அளவில் “போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும்” என்கிற வாசகங்களை கொண்டும் அதிக அளவில் விளம்பரத்தை கொண்டதாகவும் மீடியனின் இருபக்கம் தொங்கவிடப்பட்டது.
கண்ணை பறிக்கும் வண்ணங்களை கொண்ட இந்த விளம்பரம் வாகனஓட்டிகளை திசைதிருப்பும் படி இருப்பதாகவும், இப்படி விளம்பர செய்ய எப்படி அனுமதிகள் கொடுக்கப்படுகிறது எனவும் கேள்விகளை எழுப்புகிறது.

தடுப்புகளில் விளம்பரங்கள் இருந்தால் விளம்பரங்கள் 30%மும், விழிப்புணர்வு 70%மும் இருக்கவேண்டும் எனும் சூழலில் இங்கு அப்படியே தலைகீழாக விழிப்புணர்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

