கடந்த 2024-25 நிதியண்டை விட கோவை சர்வதேச விமான நிலையம் 5.15% வளர்ச்சியை சமீபத்தில் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் எட்டி சாதனை படைத்துள்ளது.
2024-25 நிதியாண்டில் கோவை சர்வதேச விமான நிலையத்தை மொத்தம் 32,53,190 பேர் (வெளிநாட்டு பயணிகள் – 2,63,385 பேர், உள்நாட்டு பயணிகள் – 29,89,805 பேர்) பயன்படுத்தினர். இது கடந்த நிதியாண்டில் சில சவால்கள் இருந்த போதும் அதிகரித்துள்ளது.
மார்ச் 31, 2026ல் நிதியாண்டு நிறைவடைந்த பின் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 2025-26 காலத்தில் கோவை விமான நிலையத்தை மொத்தம் 31,22,985 பேர் (வெளிநாட்டு பயணிகள் – 2,97, 760 பேர், உள்நாட்டு பயணிகள் – 31,22,985 பேர்) பயன்படுத்தினர்.
2025-26 ஆண்டு காலத்தில் இண்டிகோ நிறுவனம் விமானங்களை ரத்து செய்தது, இறுதி காலங்களில் ஈரான் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் தொடர்பான சவால்கள் இருந்தன. இப்படி ஒரு சூழல் இருந்தும் கோவை சர்வதேச விமானத்தில் 5.15% பதிவாகியுள்ளது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தை தரமுயர்த்த நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

