கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மண்டலம், வார்டு எண்.11-க்கு உட்பட்ட சக்தி சாலை, திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 236 மீட்டர் தொலைவிற்கும் மற்றும்  ஜனதா நகர், மடாலயம் சாலை பகுதியில், சுமார் 790 மீட்டர் தொலைவிற்கும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவற்ற இடங்களில் தார் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.11-க்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் மற்றும்  சின்னவேடம்பட்டி பிரதான சாலை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.