அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் சேவையை பாராட்டி, இன்று நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை ஜோதி பேரணி நடைபெறுகிறது. இதனையொட்டி கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி பேரணி துடியலூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் மற்றும் தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் சிறப்பு விருந்தினர்கள் ஜோதியை ஏற்றிவைத்தனர். இப்பேரணி மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரத்தில் தொடங்கி துடியலூர் வரை நடைபெற்றது.
முன்னதாக அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றியதை எல் இ டி திரை அமைத்து பார்வயிட்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
