சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் நோக்கத்துடன் சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக 200 குப்பை தரம் பிரிப்பு பெட்டிகள் சூலூர் பஞ்சாயத்துக்கு வழங்கப்பட்டன.

சூலூர் பஞ்சாயத்து தலைவர் தேவி மன்னவன் மற்றும் சாந்தி செல்வராஜ், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மேலாளர் ரஞ்சித், பிஆர்ஓ ராமசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த குப்பை தொட்டிகள் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டன.