கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (19.9.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

டாடாபாத் துணை மின் நிலையம் : மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு (ஒரு பகுதி), நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் – 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு (ஒரு பகுதி), பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

சூலூர் துணை மின் நிலையம் : சூலூர், பி.எஸ். நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர்.