கோவையில் மாநகராட்சி பகுதிகளில், ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் வார்டு எண்.50 51, 52, 54, மற்றும் 100 ஆகிய வார்டு பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களுக்கான வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள், கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள், களப் பணியாளர்கள், விலங்குகள் நலன் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள், நாய்களைப் பிடிக்கும் குழுக்கள் மற்றும் பிற உதவிப் பணியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.