கோவையில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை அன்று தொடங்கியது.

இந்த அகில இந்திய போட்டிகளில் ஆண்கள் பிரிவில்  சென்னை – இந்தியன் வங்கி அணி, புதுடெல்லி – இந்திய விமானப்படை அணி, லோனாவாலா – இந்திய கப்பல்படை அணி, புதுடெல்லி – ஓஎன்ஜிசி அணி, திருவனந்தபுரம் –  கேரள மாநில மின்வாரியம் அணி,  சென்னை – ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் அணி மற்றும், சென்னை –  தமிழ்நாடு இதர அணி ஆகிய 7 அணிகளும் விளையாடி வருகின்றன.

6. psg 1 scaled

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை – இந்தியன் வங்கி அணியை எதிர்த்து சென்னை – ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 88 / 64 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது

இரண்டாவது போட்டியில் புதுடெல்லி – ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து திருவனந்தபுரம் – கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 70 / 53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

6b scaled

மூன்றாவது போட்டியில் சென்னை – ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி அணியை எதிர்த்து புதுடெல்லி – இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி 70 / 67 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.