கோவை – ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், புதிய ரயில் எண்களுடன் நிரந்தர ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை – ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜபல்பூர் – கோவை ரயில் (எண்: 20160), அடுத்த மாதம் 23ம் தேதி முதல், வெள்ளிக்கிழமை தோறும் இரவு 11:50 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணிக்கு கோவை சந்திப்பை வந்தடையும்.

அதேபோல், கோவை – ஜபல்பூர் ரயில் (எண்: 20159), செப்டம்பர் 26ம் தேதி முதல், திங்கட்கிழமை தோறும் மாலை 5:05 மணிக்கு கோவை சந்திப்பில் இருந்து புறப்படும். இந்த ரயில் புதன்கிழமை காலை 8:45 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பை சென்றடையும்.

இந்த ரயில் பாலக்காடு, சொரணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, தொக்கூர், முல்கி, உடுப்பி, குந்தாப்புரா, மூகாம்பிகா ரோடு பைந்தூர், கும்தா, கார்வார், மட்கான், திவிம், குடால், ரத்னகிரி, சிப்ளுன், கேட், ரோஹா, பன்வெல், நாசிக் ரோடு, புசாவல், கந்தவா, ஹர்தா, இடார்சி, பிபரியா, கதர்வாரா, நரசிங்பூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ஜபல்பூரை சென்றடையும்.