கவுண்டம்பாளையம் தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்  கோரிக்கை விடுத்தார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயிலும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், அவர்களுக்கு அருகாமையிலேயே உயர்கல்வி வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அவசியம். அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படுவதன் மூலம், இப்பகுதி மாணவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சிரமம் குறைவதுடன், உயர்கல்விக்கான அணுகலும் எளிதாகும்.

மேலும், இந்தக் கல்லூரி அமைக்கப்படுவதன் மூலம் படிப்பின் வாய்ப்புகளை மேம்படுத்தி, இப்பகுதி மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய திசையை உருவாக்க முடியும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களும் உயர்கல்வியைத் தொடர இது பெரும் வாய்ப்பாக அமையும்.

“உயர்கல்விக்கான அணுகலை எளிதாக்கி, சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

கவுண்டம்பாளையம் தொகுதி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைக்கும் நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.