மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 26) அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுகின்றன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சார்பில் செயல்படும் FL1 மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், பொழுதுபோக்கு கிளப்புகளின் பார்கள் மற்றும் ஹோட்டல்கள், உணவகங்களில் உரிமம் பெற்று இயங்கும் FL3 பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில், FL1 கடைகள் மற்றும் பார்கள், FL2 பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கும் FL3 பார்கள், FL3A வகை தமிழ்நாடு ஹோட்டல் பார்கள், சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் FL3AA பார்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் FL11 கடைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ, சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்தாலோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சட்டவிரோதமாக எடுத்துச் சென்றாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
