இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சர்வதேச வணிகத் துறை சார்பில், “நவீன கல்வியாளர்களுக்கான நடைமுறை ஏஐ மற்றும் டிஜிட்டல் கருவிகள்: கல்வி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சியை எளிமைப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒருநாள் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்மா இன்னோவேஷன்ஸ் & சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன் ஜவஹர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வித்துறையில் ஏஐ மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
கற்பித்தல் பொருட்கள் தயாரித்தல், கல்வி உள்ளடக்கங்களை உருவாக்குதல், ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துதல், தகவல்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகப் பணிகளை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
