ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப்பின் இரண்டாவது பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. விழாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர்.

சிறப்பு விருந்தினராக எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார் கலந்து கொண்டார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.ஐ. மாவட்டம் 3206 மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி விஜய் விக்னேஷ், கிளப்பின் தலைவர் சந்திரசேகர், செயலாளர் முத்து அழகப்பன், இளைஞர் சேவை இயக்குநர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.