இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான மூன்று நாள் வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் ஜமீர் பாஷா, மாணவர்கள் இப்பயிற்சியின் மூலம் தங்களது வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
பயிற்சியில் தகவல் தொடர்புத் திறன், தலைமைத்துவம், குழுப் பணித்திறன், சிக்கல் தீர்க்கும் திறன், விமர்சன சிந்தனை, திறனறிவு, சுயவிவரத் தயாரிப்பு, நேர்முகத் தேர்வு நுணுக்கங்கள், பணியிட ஒழுக்கம் மற்றும் தொழில்முறை ஆளுமை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
