கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (24.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையம் : தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாசிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.

படுவம்பள்ளி துணை மின் நிலையம் : படுவம்பள்ளி, சொக்கம்பாளையம், காக்காபாளையம் மற்றும் கஞ்சப்பள்ளி.