டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் சிங்கப்பெண்  விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தலைமையுரையில் டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில்: ஆண், பெண் என்ற பாகுபாடு தற்போதைய சூழலில் மறைந்து விட்டது. பெண்கள் தைரியம், தன்னம்பிக்கை, மன உறுதியை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் தங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றார்.

Photo1 scaled

சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு பேசுகையில்: மாணவிகள் கல்வி கற்கின்ற வயதில் பெரிதான உயர்ந்த லட்சியங்களைக் குறிக்கோளாகக் கொண்டு வெற்றி என்ற இலக்கை எய்த வேண்டும்.

வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவருமே இத்தகைய உயரிய நிலையை அடைய தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் போராடி மட்டுமே சாதனை புரிந்துள்ளனர் எனப் பேசினார்.

Photo3 scaled

கோவை சிங்கப்பெண் சிறப்புப் படையின் காவல் உதவி ஆய்வாளர் அனிதா சிங்கப்பெண் திட்டம் குறித்து பேசுகையில்: சிங்கப்பெண் திட்டம் முற்றிலும் வித்தியாசமானது. பெண்களுக்கு ஏற்படுகின்ற அத்துமீறல்களைத் தெரிவிக்கும்பொழுது அவர்களுடைய ரகசியம் காக்கப்படும்.

சிங்கப்பெண்ணுக்கான தொடர்பு எண் 1091. இருபத்து நான்கு மணிநேரமும் பெண்களுக்காக காவல் உதவி வழங்கப்படும்.

பெண்களைப் பின்தொடர்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் தொல்லை அளிப்பவர்கள், மனரீதியாகத் துன்பம் அளிப்பவர்களையும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களான மதுரா பழனிசாமி, பூரணி பாவை பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், துணை செயல் அலுவலர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.