நகை துறையில் 42 ஆண்டுகளுக்கும் மேலான உன்னத பாரம்பரியம் கொண்ட ‘எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் உயர் தர நகை பிராண்ட் ஆன ‘ஜுவல் ஒன்’னின் புதிய பிரம்மாண்ட கிளை இன்று கோவை கிராஸ் கட் சாலையில் திறக்கப்பட்டது.
இந்த புதிய கிளையை ‘எமரால்டு’ நிறுவனத்தின் தலைவர் & மேலாண்மை இயக்குனர் ஸ்ரீநிவாசன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு உடன் இனைந்து பல சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு வாடிக்கையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
வின்னர்ஸ் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் இக்கிளையின் முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.

இந்த பிரம்மாண்ட கிளை ‘ஜுவல் ஒன்’ னின் ‘ஃபிளக்ஷிப் ஸ்டோர்’ என்றழைக்கப்படும் பல சிறப்புக்கள் கொண்ட மிக முக்கியமான வர்த்தக கிளை ஆகும். இந்த 5 தளங்கள் கொண்ட (தரை தளத்துடன் 4 தளங்கள்) ஷோரூமில் 5 பிரத்யேக பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புது கிளை பற்றி எமரால்டு மற்றும் ‘ஜுவல் ஒன்’ நிறுவனங்களின் இயக்குனரான தியான் சக்தி ஸ்ரீனிவாசன் ‘தி கோவை மெயில்’ லுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியதாவது :-
இன்று கோவையில் எங்களின் ஃபிளக்ஷிப் ஸ்டோரை துவக்கி உள்ளோம், கோவையில் உள்ள மிக அழகிய கிளைகளில் இது நிச்சயம் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
இங்குள்ள 5 தளங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு உள்ளது. தரை தளத்தில் தங்க நகைகளுக்கான பிரத்தியேக கலெக்ஷன்; முதல் தளத்தில் வைர நகைகள், இரண்டாம் தளத்தில் பிரைடல் (பிரத்தியேக திருமண நகை கலெக்ஷன்), மூன்றாம் தளத்தில் சர்வதேச நகை கலெக்ஷன் மற்றும் பொட்டிக், நான்காம் தளத்தில் வெள்ளி நகைகளுக்கான பிரத்தியேக தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘ஜுவல் ஒன்’ என்றாலே நல்ல தரம், நேர்த்தியான வேலைப்பாடு மற்றும் மிக அழகான அதிகமான டிசைன்கள் இருக்கும் என வாடிக்கையாளர்கள் நம்பி எங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். உங்களின் அன்புக்கு மிகுந்த நன்றிகள், வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த புது கிளைக்கு வரவேண்டும்.
இவ்வாறு கூறினார்.
