கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் ஜூலை 9 முதல் 13 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற ‘அக்ரி இன்டெக்ஸ் 2026’ வேளாண் கண்காட்சி, விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.02 16 scaled

03 8 scaled

கண்காட்சியில் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் வியப்பை தரும் வகையில் பல்வேறு அரங்குகள், நவீன கருவிகள் இடம் பெற்றிருந்தன. 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று,1,000-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

04 5 scaled

விவசாய இயந்திரங்கள், உயர்தர விதைகள், நாட்டு விதைகள், நாட்டு காய்கறிகள், பழக்கன்றுகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், நர்சரி, சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள், சோலார் தகடுகள், பசுமைக்குடில் தொழில்நுட்பம், சூரிய சக்தி உபகரணங்கள், பம்பு செட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

01 16 scaled

வேளாண் உற்பத்தி சாதனங்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான அதிநவீன இயந்திரங்கள் முதல் பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை வாங்கி சென்றனர்.

06 1 scaled

05 4 scaled

வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள், தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், தொழில்முனைவோர், வணிக நிறுவன பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சி விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.