குளு குளு கோவை சூழல் பரவலாக கோவை மாநகரில் காணப்பட்டு வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று முதல் குறைய துவங்கவுள்ளது.

இதனால் கோவை மாநகரில் எப்படிப்பட்ட மாற்றம் இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்- யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

கோவை மாநகரின் பல இடங்களில் சாரல் – லேசான மழை கடந்த சில தினங்களாக இருந்துவருகிறது. இந்த வாரத்தில் இன்று (8.7.2026) தான் இதை அனுபவித்து மகிழ கடைசி நாள். ஏனென்றால் வியாழன் துவங்கி ஞாயிறு முடிய வானிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

வியாழன் முதல் இப்போது நிலவிய காற்று சூழல் இருக்காது. அதன் வேகம் குறையும். அதேபோல மழைக்கான வாய்ப்பும் மாநகரில் இருக்காது. வெயிலுக்கான சூழல் சற்று தூக்கலாக இருக்கும். அதிகபட்சம் 32-33° செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.