கோவை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத்தின் 17வது பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம்.எஸ்.ஜி.மேனன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் பூனம் சியால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் மாணவர் தலைவராக தன்மய், மாணவிகள் தலைவராக ருஹின் பண்டாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர், மாணவியர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமான பட்டைகள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் தலைமைத்துவத்திற்கான உறுதிமொழியை ஏற்றனர்.
நிகழ்வில் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம்.எஸ்.ஜி.மேனன் பேசுகையில்: உண்மையான தலைமைத்துவம் என்பது நற்பண்பு, ஒழுக்கம், மன உறுதி மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. மாணவர்கள் முன்மாதிரியாகத் திகழவும், வெற்றிக் காலங்களில் பணிவுடன் இருக்கவும், ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் ஊக்குவித்தார்.
மேலும், அன்றாட அனுபவங்கள் மற்றும் தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து உத்வேகம் பெறுமாறும், ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு நிகழ்வும் ஒரு மதிப்புமிக்க பாடத்தை வழங்கக்கூடியவை என்றார்.
விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
