சொகுசு ஆடை நிறுவனமான கையாரா, இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை கோவையில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்.எஸ். புரம், பொன்னுரங்கம் சாலையில் புதிதாக அமைந்துள்ள ஷோரூமில் இன்று முதல் ஜூன் 26 வரை மூன்று நாட்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

cover c2 scaled

இந்தியாவின் 28 மாநிலங்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள், எம்பிராய்டரி நுட்பங்கள் மற்றும் கலாசாரக் கதைகளில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, பாரம்பரியத்தையும் நவீன ஆடை வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

cover c3 1 scaled

இதுகுறித்து கையாரா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷா வர்தினி கூறியதாவது: இந்தியாவின் பாரம்பரியத்தையும், கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ உருவாக்கப்பட்டுள்ளது.

 

பாரம்பரியத்துக்கும் நவீன சொகுசு ஆடை வடிவமைப்புக்கும் இடையே பாலமாக இந்தத் தொகுப்பு அமையும் என்றார்.

cover c4 scaled

இந்த ஆடைத் தொகுப்பின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி பிரபல பேஷன் டிசைனர் அபர்ணா சுங்கு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹெல்த் பேசிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுவாதி ரோஹித், விஎல்பிஜே குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ், சிஇஓ ஜெய்ஸ்ரீ சூர்யகுமார், ஆடை வடிவமைப்புத் துறையினர் பங்கேற்றனர்.