மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து போத்தனூருக்கு வியாழக்கிழமை (ஜூன் 25) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06063) மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10.55 மணிக்கு போத்தனூர் சந்திப்பைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஜூன் 28ம் தேதி இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06064) மறுநாள் திங்கள்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
