கோவை டவுன் ஹால் பகுதியில் இயங்கும் தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகமான பூம்புகாரில் பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவங்கி நடைபெற்றுவருகிறது.
இம்மாதம் இறுதி வரைநடைபெறும் இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலை பொருட்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து ஓவியம் கைவினை பொருட்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குறிப்பாக தஞ்சாவூர் கலை ஓவியங்கள், ரவி வர்மா பிரதி எடுக்கப்பட்ட படங்கள், கண்ணாடி ஓவியங்கள், மர ஓவியங்கள், பட்டுத்துணி ஓவியங்கள், மலைவாழ் மக்களின் கூம்பா ஓவியங்கள், களிமண்ணால் செய்யப்பட்ட ஓவியங்கள் போன்ற எண்ணற்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் புவிசார் குறியீடுகள் பெற்ற சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், அரை அடி முதல் 6 அடி வரையிலான நாச்சியார் கோவில் பித்தளை குத்து விளக்குகள், தஞ்சாவூர் கலை தட்டுகள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள், தஞ்சாவூர் பொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி வேலை பொருட்கள், மாமல்லபுரம் கரு சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மர சிற்பங்கள், மற்றும் எண்ணற்ற பித்தளை கலைப் பொருட்கள், பித்தளை சிலைகள், வென் மர சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், சந்தன கட்டைகள், நினைவு பரிசுகள் பலவித பித்தளை விளக்குகள், மண் விளக்குகள், மேலும் ஏராளமான கைவினைப் பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
இத்துடன் பலவித பூஜை பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் பலவிதமான கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஓவியம் கைவினை பொருட்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவை கட்டணம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

