இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில், கோயம்புத்தூர் கிளை மற்றும் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியின் தகவல் தொடர்பியல் துறை இணைந்து உலக மக்கள் தொடர்பு தினத்தை கொண்டாடியது.
இதில் இளம் தகவல்தொடர்பாளர்கள் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. மக்கள் தொடர்புத் துறையில் பல தசாப்தங்களாக சிறப்பாகப் பணியாற்றிய மூத்த மக்கள் தொடர்பு அலுவலர் நடராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் சாந்தா, தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் சசிகலா, இந்திய மக்கள் தொடர்பு கவுன்சிலின் கோயம்புத்தூர் கிளைத் தலைவர் பிரகதீஸ்வரன், இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் தேசிய கிழக்கு மண்டல இயக்குநர் சுவாமிநாதன், மாணவர்கள், ஊடகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
