கோவை மாநகரில் திங்கள் முதல் வியாழன் வரை ஆங்காங்கே சாரல் மழை பெய்ய வாய்ப்புண்டு. காலையில் லேசான வெயில், மதியம்

சில இடங்களில் மேகமூட்டம் காணப்படலாம். மழையானது சாரல் அளவில் இருக்க வாய்ப்பு, கனமழைக்கு இந்த வாரம் வாய்ப்பு இல்லை.

மாவட்ட அளவில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், கேரளாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் (பொள்ளாச்சி, கிணத்துக்கடவு) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மாநகரில் வெயிலை பொறுத்தவரை வியாழன் வரை 31 டிகிரி செல்சியஸ் நிலவும். அதன் பின்னர் 32-33 டிகிரி செல்சியஸ் ஆக உயர வாய்ப்புள்ளது.

தகவல் : சுஜய், வானிலை ஆய்வாளர்.