கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல், கட்டடவியல் மற்றும் மருந்தியல் புல மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராமசாமி விழாவுக்குத் தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் ரவி முன்னிலை வகித்தனர்.

graduarion1 scaled

கரூர் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி பேசுகையில்:

இளைஞர்களின் பொதுநலப் பங்களிப்பும், தியாகவுணர்வும் இந்தியாவின் புகழை உலக அரங்கில் மேலும் உயர்த்த வேண்டும். அவர்கள் நாட்டுக்குச் செய்யவேண்டிய அடிப்படைக் கடமைகள் குறித்த பொறுப்புணர்வைக் கொண்டிருக்கவேண்டும். தெளிவான செயலாக்கத்துக்குக் கல்வியும், ஆராய்ச்சியும் துணைசெய்ய வேண்டும் என்றார்.

விழாவில், 1038 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 9 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 16 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.