கவிதை உறவின் சார்பில், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசனின் ‘வெற்றி உங்கள் பக்கம்’ என்ற தன்னம்பிக்கை நூலுக்கு, சிறந்த வாழ்வியல் நூலுக்கான விருது சென்னையில் வழங்கப்பட்டது.

விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் வழங்கினார்.

அருகில், காவல் துறை துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் கோவை வானொலியின் முன்னாள் இயக்குனர் சேயோன் ஆகியோர் உள்ளனர்.