தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை காட்டூர் பகுதியிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு விலை மதிப்பிலான நகை மற்றும் ருபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் கூறுகையில், காட்டூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தனலட்சமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிப்பார். இம்முறை அம்மனை தங்கம், வைரம் மற்றும் பணங்களால் அலங்கரித்து உள்ளோம். இப்பகுதியில் உள்ள மக்கள், பக்தர்கள், வியாபார பெருமக்கள் என அனைவரும் காலை முதல் வருகை தருகின்றனர் என கூறினார்.
ஒரு தகவலின்படி ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையிலான ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
,
