கோவை ஸ்வர்கா அறக்கட்டளை மற்றும் சர்வதேச ரத்தினவியல் நிறுவனம் (இந்தியா) இணைந்து, பாலக்காடு ரயில் நிலையத்தில் “சுகம்யா திட்டம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.

ஸ்வர்கா அறக்கட்டளை 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல், ஆதரவு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளிப்பை முன்னிலைப்படுத்தும் முன்னணி தொண்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் புதிய படைப்பான சுகம்யா திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதல் முறையாக பாலக்காடு ரயில் நிலையத்துக்கு மொபைல் சாய்வுதளங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்வில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்  அருண் குமார் சதுர்வேதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் சுதந்திரமாகவும் நம்பிக்கையுடனும் பயணிக்க தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களிலும், ரயில்களில் செல்லும் பாதைகளிலும் தடையற்ற மாற்றுத் திறனாளிகள் எந்தத் தடைகளும் இன்றி இனி பயணிக்க முடியும்.

ஸ்வர்கா அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் ஸ்வர்ணலதா கூறுகையில்,”மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்றும் இந்த “சுகம்யா திட்டம்” உதவும் என்று சொன்னால், அது மிகையாகாது” என்கிறார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

மொபைல் சாய்வுதளங்கள்:

பாலக்காடு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டிகளில் தடையின்றி ஏறவும், இறங்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எடை குறைந்த சிறிய சாய்வுதளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை ரயில் நுழைவாயில்களுக்கு அருகே வைக்கப்பட்டு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன.

௩

தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலிகள்:

வசதியான இயக்கத்திற்கும், சுயாதீனமான பயண அனுபவத்திற்கும் ஏற்ப, புதிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்நாற்காலிகளை பயன்படுத்தி நிலைய வளாகத்தில் சீராக இயங்கவும், ரயில்களில் தடையின்றி ஏறவும் இயலும்.

இந்தத் திட்டத்தின்கீழ், பாலக்காடு கோட்டத்தின் எல்லா ரயில் நிலையங்களிலும் 24 மொபைல் சாய்வுதளங்களும் 24 தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலிகளும் ஒப்படைக்கப்பட்டன.

2 54