கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
“கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதை எப்படி பார்க்கின்றீர்கள்? செந்தில் பாலாஜியா வேலுமணியா?” என முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், கோவை மாவட்டத்தில் யார் போட்டியிட்டாலும் இங்கு அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை கொடுத்துளோம். இது (கோவை) எப்போதும் அதிமுகவின் கோட்டை. இன்று நிலவும் சூழலில், திமுக மேல் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 5 ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை. மீண்டும் அதிமுக வந்தால் தான் மிக பெரும் வளர்ச்சியை கொடுக்கமுடியும். நிறைய திட்டங்கள் நடைபெறவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் அதிகமான திட்டம் கோவைக்கு வரும். மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார்.
இவ்வாறு கூறினார்.

