கோவை மாநகர் மாவட்ட திமுக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணி சார்பில் ரயில் நிலையம் அருகில் வியாழக்கிழமை (1.5.2025) நடைபெற்ற ‘உழைப்பாளர் தினம்’ நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, கழகக் கொடியை ஏற்றி வைத்து, ஆட்டோ தொழிற்சங்க பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
பின்னர் 500 ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

மாநகர் மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயகுமார் தலைமையில், கழக மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் LPF தமிழ்செல்வன், பகுதி கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், வட்டக் கழகச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், LPF செல்லப்பா, ஆர்.முகிலன், நவாஸ், அஜீஸ், கோவை இக்பால், துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் அணி நிர்வாகிகள், தொமுச.தொழிற்சங்க நிர்வாகிகள், ஏராளமான தொமுச தொழிலாளர் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
