உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் டாப்ஸ்லிப்பில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகமான உலாந்தி மலைத்தொடருக்கு களப்பயணம் சென்றனர்.

மாணவர்களிடையே சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது. இதில் பல்லுயிர் பெருக்கத்தை எடுத்துக்காட்டும் தகவல் தரும் திரைப்படத் திரையிடல் காட்சிப்படுத்தப்பட்டது.

sn

ஆனைமலை காப்பகத்தின் சுற்றுச்சூழல் செல்வத்தையும் வரலாற்றையும் காட்சிப்படுத்தும் காப்பக அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். வாகன சவாரி மூலம் பல்வேறு வனவிலங்கினங்களின் இயற்கை வாழ்விடங்கள், சூழல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.