பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு,’தி கோவை மெயில்’ வெளியிட்ட சிறப்பு இதழ், பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தி கோவை மெயில்’ இதழில், கோவிலின் வரலாறு, நல்லறம் அறக்கட்டளை சார்பில் நொய்யல் ஆற்றுப் படித்துறையில் புதிதாக கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம் பற்றிய விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள், இந்த சிறப்பு இதழை ஆர்வமுடன் வாங்கி, அதிலுள்ள தகவல்களைப் படித்து மகிழ்ந்தனர். இதன் மூலம், கோவிலின் மகத்தான பாரம்பரியம் மற்றும் தர்ப்பண மண்டபத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.









